தலவாக்கலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி,14 பேர் காயம்!

தலவாக்கலை கட்டுகளை பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் குளவி கூடு ஒன்று கலைந்ததன் காரணமாகக் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 14 பேர் காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் அதிசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய 7 பேர் ஓரளவு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லிந்துலை தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.