சிறிசேனாவுக்கு கோபமாக கடிதம் எழுதிய சகோதரியை பறிகொடுத்த வெளிநாட்டு பெண்!

இலங்கையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேனா பொதுமன்னிப்பு வழங்கியது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண்ணின் சகோதரி மிகுந்த வேதனையுடன் பேஸ்புக் பக்கத்தில் அதிபருக்கு கடிதம் எழுதுள்ளார்.

இலங்கையில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30–ஆம் திகதி ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Yvonne Jonsson என்ற 19 வயது இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

Advertisement

இந்த கொடூர கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூட் ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறீசேனா பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதால், இது நாட்டிலே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தற்போது Yvonne Jonsson சகோதரி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், அதிபர் சிறிசேனா, இந்த கடிதத்தை நான் உங்களுக்கு தான் எழுதுகிறேன்.

ஆனால் இதை நீங்கள் படிக்கமாட்டீர்கள் என்று தெரியும். அந்த கொடூர குற்றவாளிக்கு இது மன்னிப்பு வழங்கியுள்ளீர்கள், அதுவும் சனிக்கிழமை, ஏனெனில் அது வாரத்தின் கடைசி நாட்கள் என்பதை புரிந்து கொடுத்துள்ளீர்கள்.

இந்த முடிவு இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற தந்தையாகிய உங்களால் எப்படி எடுக்க முடிந்தது? என் சகோதரி பட்ட ஒவ்வொரு காயமும் என் நினைவில் இருக்கிறது.

இந்த வலி எப்படி இருக்கும் என்பதை சொன்னால் புரியாது? அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். என் தந்தை வெளியில் பார்க்க தைரியமாக இருப்பது போல் உள்ளார். ஆனால் அவர் வீட்டின் கதவுக்கு பின்னால் இந்த சம்பவத்தால் எப்படி அழுதார் தெரியுமா? உடைந்து போனார்.

அவருடைய அழுகையை நிறுத்துவதற்கு எத்தனை வருடங்கள் தேவைப்பட்டது. என்னுடைய அம்மா இதை வெளியில் காட்டாமல் அப்படியே சொல்ல முடியாமல் இன்றளவும் அதை நினைத்து வேதனையில் இருக்கிறார்.

தங்கையின் இழப்பு எங்கள் வாழ்வில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்திக்கிறது. அதுமட்மின்றி இது மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த செய்தியை கேட்டவுடன் அப்படியே உடைந்து போய்விட்டேன்.

நாங்கள் சகோதரி இழப்பில் இருந்து மீள்வதற்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது, ஆனால் தற்போது இந்த செய்தியால் மீண்டும் அந்த நினைவு, அந்த கொடூரனுக்கு இப்படி ஒரு மன்னிப்பு ஏன்? அதற்கான காரணத்தை தெளிவாக கூறுங்கள்.

எனக்கு 4 மாத பெண் குழந்தை இருக்கிறது. நான் ஒரு இளம் பெண்ணாக இருந்த போது நடந்த இந்த சம்பவம், அதன் பின் நான் ஒரு பக்குவமான நிலைக்கு வந்த பின்னரும் மறக்க முடியவில்லை, தற்போது ஒரு பெற்றோராக நான் நிற்கிறேன்.

இது அப்படியே எங்களை தொடர்வது போன்றே உள்ளது. மனது வலிக்கிறது. இறுதியாக அதிபர் அவர்களே இலங்கை சிறையில் எத்தனையோ சிறு குற்றங்கள் செய்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள், ஆனால் அதை எல்லாம் விடுத்து இந்த கொடூரனுக்கு இப்படி ஒரு மன்னிப்பு வழங்க தயவு செய்து உண்மையான காரணத்தை கூறுங்கள்.

என் சகோதரிக்கு நேர்ந்ததையும் எங்கள் குடும்பத்திற்கு வந்த துயரத்தை எந்த செயலும் சரிசெய்ய முடியாது, ஆனால் நீங்கள் உங்கள் பதவிகாலம் முடியும் முன்பு அதிபர் என்ற அதிகாரத்தை வைத்து எங்க துயரத்தை இன்னும் மோசமாக்கிவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை கண்ட இணையவாசிகள் பலரும் சிறிசேனாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

President Maithripala Sirisena, I am writing this letter to you, but I am fully aware you may never read it. Just as you…

Publiée par Caroline Jonsson-Bradley sur Dimanche 10 novembre 2019