ரஷ்யாவில் ஓடும் இரயிலில் ஏற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி – CCTV காணொளி

ரஷ்யாவில் ஓடும் இரயிலில் ஏற நினைத்த பெண் ஒருவர் தவறி விழுந்ததால், அவர் கால் துண்டான வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ரஷ்யாவின் Kropotkin நகரில் இருக்கும் Kavkazskaya இரயில் நிலையத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் மற்றும் ஆண் நபரும், அங்கு வந்த இரயிலில் ஏற முயன்றனர்.

Advertisement

இரயில் நிற்காமல் சென்றதையடுத்து அவர்கள் குறித்த இரயிலில் ஏற முயற்சிக்க, அப்போது அந்த பெண் எதிர்பார்தவிதமாக கீழே விழுந்ததால், கால் மீது இரயில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அவரின் ஒரு கால் துண்டானதாக அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குறித்த பெண் யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை, ஆனால் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்ததால் தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.