உண்டியல் பணத்தை பெற வந்தவர், தம்முடன் திருப்பி கதைத்துவிட்டார் கடுப்பில் பணத்தை கொடுக்க மறுத்த யாழ் நகைகடை!

யாழ்ப்பாணத்தில் வாடிக்கையாளர் ஒருவரை வர்த்தக நிலையம் ஒன்று அவமதித்தது தொடர்பான விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகிறது.

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்படாத உண்டியல் நடவடிக்கையில் ஈடுபடும் யாழ் நகரத்தில் ஈடுபடும் நகைக்கடை ஒன்று, வாடிக்கையாளருடன் அநாகரிகமாக நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

பணத்தை பெற சென்றவரிடம், வெளியில் சென்று காலணியை கழற்றிவிட்டு வருமாறு கடையிலிருந்தவர் சொல்லியுள்ளார். பணத்தை பெற சென்றவர்,இது வாடிக்கையாளரை அவமதிக்கும் செயல் என குறிப்பிட்டு விட்டு, வெளியில் சென்று காலணியை கழற்றிவிட்டு வந்து உள்ளே அமர்ந்துள்ளார்.

பணத்தை பெற வந்தவர், தம்முடன் திருப்பி கதைத்துவிட்டார் என மூக்கின் மேல் கோபம் வந்த கடைக்காரர்கள், காசளரிடம் “இவரை அனுப்பி விடுங்கள். இவருக்கு பணம் கொடுக்க முடியாது“ என தெரிவித்துள்ளனர். அத்துடன், பணம் கொடுக்காமல் அவரை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

வாடிக்கையாளர்களுடன் எப்படி நடப்பது என்ற அடிப்படை அறிவுமில்லாமல், அராஜகமாக நடந்து கொண்ட அந்த வர்த்தக நிலையத்தின் மீது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் வெளியிடப்பட்டு வருகிறது.

முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களையும், இந்த “மூக்குப்புடைத்த“ வர்த்தக நிலையங்களையும் ஒப்பிட்டு பலரும் பதிலிட்டு வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவரின் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Rube Jewellery என்கின்ற கடைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததாக தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு நான் அங்கு சென்றேன்…

Publiée par கமலநாதன் சசீந்திரன் sur Dimanche 10 novembre 2019