யாழ் பஸ்நிலையத்தில் நின்ற இந்த ஐயா யாா் என்று தெரிந்தவர்கள் – உறவுகளுக்கு தெரிவியுங்கள்?

இன்று காலை யாழ்பாணம் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் காணப்பட்ட இந்த ஐயா சுமார் 90 வயது மதிக்கத்தக்கவராகவும் கைகள் நடுங்கிய நிலையில் சற்று பார்வையும் குறைந்துள்ளது, தான் சந்நிதானம் ஆலயத்தில் இருந்து வந்ததாகவும் தற்போது வாழைச்சேனை செல்ல வேண்டும் எனவும் பின்னர் ஏறாவூர் பின்னர் செங்கலடி பின்னர் கிரான் போக வேண்டும் அங்கு பிள்ளையார் கோவில் விஷ்ணு கோவில் இரண்டிற்கும் போக வேண்டும் என்றும் ஏறாவூர் வீரபத்திரர் ஆலயத்தில் தான் பூஜைகள் செய்தவர் என்றும் கூறினார்

ஆனால் இவர் இவ்வாறு அடிக்கடி வந்து கூறுவதாகவும் காசு இல்லாமல் இவரை ஏற்றிச் செல்லும்போது திடீரென்று கிளிநொச்சி,சாவாகச்சேரி போன்ற பகுதிகளில் இறங்கிவிடுவதாகவும் பின்னர் மீண்டும் யாழ்பாணம் வந்துவிடுவதாகவும் உடல்நிலையும் மனநலமும் சற்று குன்றியவராக இருக்கிறார் ஏன்றும் பஸ் சாரதிகள் நடத்துணர்கள் கூறினர் நானும் அவரோடு பேசி இந்த தகவல்களைப் பெற்றதோடு அவரது குடும்பம் பற்றி விசாரித்தபோது தான் யாழ் வண்ணார்பண்ணையில் பிறந்ததாகவும் வல்வெட்டித்துறையில் வசித்ததாகவும் கூறி அழுவிட்டார் அதன் பின்னர் எதையும் பேச மறுத்தே விட்டார் (தன்னிடம் பாஸ்போட் இருப்பதாகவும்,சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாகவும் கூறினார் பார்வை குறைவாக இருந்த போதும் பஸ் தரிப்பு நிலையத்தில் உள்ள பதாதைகளில் உள்ள ஆங்கில வார்த்தைகளையும் வாசிக்கிறார்) கவலையாக இருந்தது,(யாரிடமும் பணமோ உணவோ கூட கேட்கவில்லை கெத்தாகதான் இருக்கிறார் நன்றாகவாழ்ந்த மனிதர் போல் தெரிகிறது)

இவரைப்பற்றிய தகவல்களை தாருங்கள் அல்லது அவரை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள் அத்தோடு இந்த பதிவை அதிகமாக பகிர்ந்து அவரது உறவுகளுக்கு தகவல் கிடைக்கச் செய்யுங்கள்.