தெஹிவளையில் மசாஜ் நிலையம் என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை!

தெஹிவளை – கட்டுவான பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகையிடப்பட்டு முகாமையாளர் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை – கட்டுவான பகுதியில் நேற்று கல்கிஸ்ஸை குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய , நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட உத்தரவுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.இதன்போது முகாமையாளர் பெண்ணொருவரும் , விடுதியை நடத்துவதற்காக உதவி ஒத்தாசைகளை வழங்கிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.