யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் பதவி நீக்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் ஒருவர் பதிநிக்கம் செய்யப்பட்டவுள்ளார்.

பல்கலைக்கழக தாபன விதிக் கோவைக்கு அமைய உயர் பட்டக் கல்வித் தகைமையை குறிப்பிட்ட கால
வரையறைக்குள் நிறைவு செய்யத் தவறிய காரணத்தினால் குறித்த விரிவுரையாளர் பதவி நீக்கம்
செய்யப்பட வேண்டும் என பல்கலைக்கழக பேரவையினால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையிலேயே இந்த தீர்மானம்
எடுக்கபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் ஒருவர் உரிய காலப் பகுதியினுள்
உயர்கல்வித் தகைமையைப் நிறைவு செய்திருந்த போதிலும், அது பற்றிய தேவைப்பாடுகளைப்
பல்கலைக்கழக தாபனக் கிளை நிறைவேற்றத் தவறியுள்ளது.

இதன் காரணமாகவே , சமர்பிக்கப்பட்ட பேரவைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்க
வேண்டிய நிலமை ஏற்பட்டதாக பேரவை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது