யாழ், பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலாபம் – புத்தளம் வீதியின் பங்கதெனிய – லுனுஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (புதன்கிழமை) இரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ள நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்ததோடு, இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.

முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர், குறித்த கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, பேருந்தின் சாரதி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சிலாபம் ஊடாக பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மீது இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.