யாழ,சமுர்த்தி அலுவலகத்துக்குச் சென்ற பெண்ணை காணவில்லை!

ஞானசம்பந்தர் வீதி சங்கரத்தை வட்டுக்கோட்டையை சேர்ந்த மகேந்திரன் யசோதா என்பவரை 11.11.2019 தொடக்கம் காணவில்லை.

இவர் தபாலகத்திற்கும்,சமுர்த்தி அலுவலகத்திற்கும் செல்வதாகவும் வரும் போது வயது முதிர்ந்த தனது தாயாருக்கு மருந்து வாங்கி வருவதாக கூறி காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

தபால் நிலையத்திற்கு அருகில் இருந்த CCTV பதிவுகளை பார்த்தபோது தபால் நிலைய வாயில் வரை வந்தவர் அலுவலகத்திற்குள் செல்லாது திரும்பியதும் கண்டறியப்பட்டுள்ளது.

”சில சந்தர்ப்பங்களில் மன உளைச்சலான நிலையில் காணப்படுவார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது”என சகோதரன் ஒருவர் தெரிவித்தார்