ஜனாதிபதி தேர்தல் தபால்மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுபவர்களின் பெயர் விவரங்கள் தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது. இதனை தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்த போதும், அந்த பெயர் விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை அவர் யாழ்.மாவட்ட தேர்தல்கள் செயலகம் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உணவு ஒறுப்புப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.
அவர் போராட்டத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுகலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.