சுவிட்சர்லாந்தில் 40 பேர் கொண்ட 2 குழுக்கள் நேருக்கு நேர் வெறித்தனமா மோத தயாரான நேரத்தில் நடத்த விபரீதம்!

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் சுமார் 40 பேர் கொண்ட 2 குழுக்கள் நேருக்கு நேர் கைகலப்பில் ஈடுபட நேரம் குறித்துள்ளதாக வெளியான தகவலையடுத்து மண்டல பொலிசார் மேற்கொண்ட துரித நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

துர்காவ் மண்டலத்தின் Erlen ரயில் நிலையமருகே சுமார் 40 பேர் கொண்ட இரு குழுக்கள் வெள்ளியன்று மாலை மோதலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி மண்டல பொலிசாருக்கு இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தொடர் தொலைபேசி அழைப்புகளும் வந்தவண்ணம் இருந்துள்ளன.

இதனையடுத்து Erlen ரயில் நிலையத்தில் மண்டல பொலிசார் குவிக்கப்பட்டனர். சுமார் இரவு 8.30 மணியளவில் இந்த நேருக்கு நேர் கைகலப்பு நடக்க இருப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக துரிதமாக செயல்பட்ட மண்டல பொலிசார், Romanshorn மற்றும் Amriswil பகுதியில் இருந்து இளைஞர்கள் கிளம்பியுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

எர்லனில் ரயில் நிறுத்தப்பட்டதும் அவர்களை வெளியேறாதபடி தடுக்க மண்டல பொலிஸ் படைகள் முடிவு செய்தன,

மட்டுமின்றி, இதனால் அந்த இரு குழுக்களும் நேரில் சந்தித்துக் கொள்வதை தடுக்க முடியும் என பொலிசார் திட்டமிட்டனர்.

இதனையடுத்து Oberthurgau பகுதியில் இருந்து வந்த இளைஞர்கள் குழு ஒன்று, அதன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கியுள்ளது.

அவர்களை மடக்கிப் பிடித்த பொலிசார், அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை பெற்ற பின்னர் விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

துர்காவ் மண்டல பொலிசாரின் துரித நடவடிக்கை ஒன்றினால் இளைஞர்கள் பலர் ரத்த காயமின்றி தப்பியதாக கூறப்படுகிறது.