கனடாவில் தமிழ் பெண்ணொருவர் – மக்களின் உதவியை நாடும் பொலிஸ்

கனடாவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

28 வயதான தாஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே காணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு மிட்லாண்ட் அவென்யூ மற்றும் எக்ளிண்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக இனங்காணப்பட்டுள்ளார்.

இவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை ரொரன்றோ பொலிஸார் கேட்டுள்ளனர்.