Home பல்சுவை கோழியா, முட்டையா முதலில் வந்தது?: விடை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்!

கோழியா, முட்டையா முதலில் வந்தது?: விடை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்!

கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற தலையை பிய்த்துக் கொள்ளும் கேள்விக்கு விடை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

சீனாவில் உள்ள The Nanjing Institute of Geology and Paleontology (NIGPAS) வியாழக்கிழமை (28) கோழியா, முட்டையா சர்ச்சைக்கு விடை கண்டறிந்ததாக அறிவித்தது. விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, முட்டையே முதலில் தோன்றியது என தெரிவித்துள்ளனர்.

609 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமொன்றை ஆராய்ந்த பின்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். உயிரின தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

609 மில்லியன் ஆண்டுகள் பழமையான கேவியாஸ்பேராவின் கரு. புதைபடிவங்களின் tomographic எக்ஸ்ரே அடிப்படையிலான கணினி மாதிரிகள்,வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களைக் காட்டுகிறது
NIGPAS ஆராய்ச்சியாளர்கள் யின் சோங்-ஜுன் (Yin Zong-jun) மற்றும் Zhu Mao-yan சமீபத்தில் பிரிஸ்டல் பல்கலைக்கழகம், ஸ்வீடிஷ் ரோயல் மியூசியம் ஓஃப் நச்சுரல் ஹிஸ்டரி மற்றும் சுவிஸ் லைட் சோர்ஸ் (எஸ்.எல்.எஸ்) ஆகியவற்றுடன் இணைந்து 609 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமொன்றை கண்டுபிடித்தனர்.

சீனாவின் குய்ஷோ மாகாணத்தில், 609 மில்லியன் ஆண்டுகளின் முன்னான பல்லுயிரியான கேவியஸ்பேராவினுடையதை ஒத்த கருவையே கண்டறிந்தனர்.

பந்து வடிவத்திலிருந்த அந்த செல் கொத்துக்கள், இன்றைய விலங்குகளின் ஆரம்ப நிலையாக இருக்கலாமென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

ஆய்வு முடிவுகள் புதன்கிழமை (நவ. 27) இரு வார அறிவியல் இதழான “Current Biology” இல் வெளியிடப்பட்டன. கேவியஸ்பேராவின் கருக்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாகவும், ஒற்றை செல் மற்றும் பலசெல்லுலர் உயிரினங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதாகவும் ஆய்வு முடிவுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேவியஸ்பேராவின் கரு அதன் செல்லுலார் கட்டமைப்பைக் காட்டுகிறது. மற்றும் செல்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது. ஸ்கானிங் எலக்ட்ரோன் மைக்ரோஸ்கோபியைப் பயன்படுத்தி இந்த படம் பெறப்பட்டது. புதைபடிவ மாதிரி விட்டம் அரை மில்லிமீட்டருக்கும் குறைவானது.
மேலதிக பரிசோதனைகள் இன்னும் செய்யப்பட வேண்டியிருந்தாலும், உயிர் எவ்வாறு வந்தது என்பதை புதைபடிவங்கள் விளக்குகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் உயிரியல் வரலாற்றில் ஒரு புதிய அடித்தளத்தை அமைக்கும் என்று NIGPAS ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.