Home யாழ் செய்தி யாழ்.மாவட்டத்துக்கு புதிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் நியமனம்!

யாழ்.மாவட்டத்துக்கு புதிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் நியமனம்!

யாழ் மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் சேனாரத்ன, இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் வைத்து, இன்று (02) முற்பகல் 11.15 மணியளவில், அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொலிஸ் தலைமையக்கதின் தகவல் தொழில்நுட்பம், ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய நிலையிலேயே, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக இவருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய ராஜித, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள், பொலிசாருடன் இணைந்து செயற்பட வருமாறு யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்த மகேஷ் ரத்நாயக்க ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் இன்றைய தினம் நான் பிரதிப் பொலிஸ்மா அதிபராக எனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளேன். வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த என்னாலான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளேன். அத்தோடு பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு நான் முழுமையாக முயற்சிப்பேன். வடக்கில் பணியாற்றும் பொலிசாருக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் நான் பூரணமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன்.

எனினும் பொது மக்களுக்கு நான் ஒரு அழைப்பு விடுக்கின்றேன் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு பொசாருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் எனத் தெரிவித்தார்.