நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மூங்கிலில் தூக்கிச்செல்ல வேண்டிய அவலம்!

தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மூங்கிலில் தூக்கிச்செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் கிராமப் புற பகுதிகளில் அவசர உதவிக்கும், சடலத்தைச் எடுத்துச் செல்வதற்கும் ஆம்புலன்ஸ் உதவி மறுக்கப்பட்டு வருவது தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

2016ம் அண்டு ஒரிசா மாநிலத்தில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட டானா மஜி, இறந்த தனது மனைவியின் சடலத்தை தோளில் சுமந்தபடி மகளுடன் சாலையில் நடந்துச்சென்றது நாட்டையே உலுக்கியது.

இந்த வரிசையில், தமிழகத்தின் ஈரோட்டு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டுள்ளது.

இதனயைடுத்து, உறவினர்கள் மூங்கிலில் தொட்டில் அமைத்து 6 கி.மீற்றர் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்பகுதியில் இருக்கும் மோசமான சாலைகளால் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.