யாழ்,காரைநகர் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு மருந்து சுற்றிக்கொடுக்கும் காகிதாதிகளுக்கு மேல் குட்டைநாய்!

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு மருந்து சுற்றிக்கொடுக்கும் காகிதாதிகளுக்கு மேல் குட்டைநாய் ஒன்று படுத்திருந்த விடயம் நேற்று புதன்கிழமை (04) பெரும் பூதாகரமானது.

இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, இதைக் கண்டுபிடித்த தரப்பினருக்கும் பாதுகாக்கத் தவறிய தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் இடம்பெற்றமையை அவதானிக்க முடிந்தது.

நேற்றும் இவ்வாறு குட்டைநாய் படுத்திருந்தமை அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் குழப்பம் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு மருந்து சுற்றிக்கொடுக்கும் காதிதாதிகளுக்கு மேல் இவ்வாறு நாய் படுத்திருப்பது பெரும் சுகாதாரக் குறைபாடு என்பதை சிலர் சுட்டிக்காட்டியதை அவதானிக்க முடிந்தது.