கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் மரம் முறிந்து விழுந்து குழந்தை பலி!

கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் தென்னைமரம் சரிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குழந்தையை அவரது பாட்டி குளிப்பாட்டிக்கொண்டிருக்கையில், தென்னைமரம் அடியோடு சரிந்து குழந்தையின் மீது விழுந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

1 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.