நேபாளம் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் பலர் டெங்கு நோயால் பாதிப்பு!

நேபாள தலைநகரில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் பலர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோய் தொற்று காரணமாக நேபாளம் – கத்மன்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை வீரர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் வைத்திய சிகிச்சை தொடர்பில் திருப்தி அடைய முடியாமையினால் இலங்கை வைத்தியர் ஒருவரின் ஆலோசனை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அணிக்கு பொறுப்பான வைத்தியர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.இந்த வீரர்கள் 13 பேரில் 7 பேருக்கு இலங்கையிலேயே டெங்கு நோய் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் தங்கியிருந்த போது இந்த தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.