விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சித்தார்கள் என இருவர் கைது!

மூதூர், கட்டைப்பறிச்சான் அம்மன்நகர் – 02 ஆம் பகுதியைச் சேர்ந்தஎதிர்மனசிங்கம் பிரபு மற்றும் மூக்கையா கணேஸ் ஆகிய இருவரும் நேற்று இரவில் இருந்து தொடர்புகளற்றுப் போயுள்ளனர்.

கொடுக்கல் வாங்கல் விடயமொன்று தொடர்பாகச் சம்பூருக்குச் செல்வதாக நேற்று 07.12.2019 மாலை புறப்பட்ட இருவரும் குறித்த வீட்டிற்குச் செல்லவில்லை என்பது இன்று காலை தெரியவந்துள்ளது.

Advertisement

காவல்துறை முறைப்பாடுகளை அடுத்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது அவ்விருவரும் பயங்கரவாதப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் கைது செய்து இன்று காலை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற புலனாய்வுப் பிரிவினர் அவர்களைத் தாம் கைது செய்திருப்பதை உறுதிப்படுத்தியதுடன் “விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சித்தார்கள்“ என்ற குற்றச்சாட்டில் கைது செய்வதாகத் தெரிவித்திருப்பதாகவும் அங்கிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூதூர் பிரதேசசபை உறுப்பினர் அறியத்தந்துள்ளார்.