நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கும்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை வானிலை அவதான நிலையம் விடுத்துள்ளது.

இதன்படி கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் கடும் மழை மற்றும் தற்போது நிலவும் காலநிலை தொடரலாம் என்று அந்த நிலையம் அறிவித்துள்ளது.