யாழில் ஒன்பது வயதுச் சிறுமி பூசகராலும், சிறுமியின் சித்தப்பாவினாலும் துன்புறுத்தப்பட்ட வழக்கின் குற்றவாளிக்கு பிணைகோரிய ஸ்ரீகாந்தா!

யாழில் ஒன்பது வயதுச் சிறுமி பூசகராலும், சிறுமியின் சித்தப்பாவினாலும் பாலியல் துன்புறுத்தலுக்குட்பட்ட விவகாரத்தின் வழக்கு நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பாக சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் அவர்களும், பூசகர் சார்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவும் முன்னிலையாகி இருந்த நிலையில்

சிறுமியின் சித்தப்பா சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை.

கடந்த மாதம் குறித்த சிறுமிஅலைபேசி வைத்திருப்பதை அவதானித்த ஆசிரியர் அது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த பொழுது வல்வெட்டித்துறை அர்ச்சகர் ஒருவர் தொலைபேசியை தந்ததாகவும் அலைபேசி மூலம் பிரசாதம் தர ஆலயம் வருமாறு அழைத்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர் சிறுவர் பாதுகாப்புபிரிவினரை தொடர்புகொண்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார் பூசகரையும் சிறுமியின் சித்தப்பாவையும் கைதுசெய்தனர்.

விசாரணையில் சிறுமியை பூசகர் பாலியல் துன்புறுத்தியதுடன் அதிகளவு பணத்தையும் கொடுத்ததும் தெரியவந்தது.

அத்துடன் அர்ச்சகரால் வழங்கப்பட்ட ஒரு தொகை பணத்தையும் சிறுமி பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சிறுமியின் சிம் அட்டையும் பூசகரின் பெயரிலேயே காணப்பட்டது.

இதனையடுத்து அர்ச்சகரும், சித்தப்பாவும் கைது செய்யப்பட்டு பருத்துறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 30ம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டபோது, வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று குறித்த வழக்கு பருத்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தபோது சந்தேக நபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது முதலாவது சந்தேக நபர் சார்பில் மன்றுரைத்த ஸ்ரீகாந்தா , பூசகர் அவர்கள் 72 வயது நிரம்பியவர் என்றும், அவர் வன்புணர்வுக்குட்படுத்தியதாக பொலீஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் சிறுமி தெரிவிக்கவில்லை என்றும் எனவே அர்ச்சகர் பிணையில் விடுவிக்கப்படவேண்டும் என மன்றுரைத்தார்.

அதனை தொடர்ந்து , சிறுமி ஆலய அர்ச்சகரால் 2 வருடமிக தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்த்பட்டுள்ள நிலயில், மக்கள் வழிபடும் ஆலயசமூகத்தில் இவ்வாறான சமூகபிரள்வு இடம்பெற்றுளளமை பாரதூரமானவிடயம் இதனை சமூகத்தில் அனுமதிக்கமுடியாது என்றும் சட்டத்தரணி சுகாஷ் மன்றுரைத்தார்.

அத்துடன் குறித்த , சிறுமி பராயமடையாதவர் என்பதனால் ,அவருக்கு பூசகரால் தனக்கு இழைக்கப்பட்ட பாதிப்பை விபரிக்கமுடியாது என்றும் சுட்டிக்காட்டிய சுகாஸ்,அதனால் தான் சட்ட மருத்துவ அறிக்கையை கோருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பராயமடையாத சிறுவர்களின் காப்பகமாக நீதிமன்றமே உள்ளதாக குறிப்பிட்ட அவர், முதலாவது சந்தேக நபரான அர்ச்சகரும் அவரக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் சித்தபபாவையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் மன்றில் எடுத்துரைத்தார்.

இந்நிலையில் இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதவான், சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்து அவர்களது விளக்கமறியலை வரும் 20ம் திகதிவரை நீடித்ததுடன், சிறுமியின் சட்ட மருத்துவ அறிக்கையையும் அவரது வாக்குமூலத்தையும் அன்றையதினம் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் பொலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.