கைவிடப்பட்ட காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை யாழில் ஆரம்பம்!

வடக்கில் உள்ள கைவிடப்பட்ட தனியார் காணிகளை சுவீகரித்து அவற்றை துப்பரவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருப்படுகிறது.

நாட்டில் நிலவுகின்ற டெங்கு நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக இன்று (சனிக்கிழமை) வலிவடக்கு பிரதேச சபை மற்றும் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமணைக்கு உட்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சிவப்பு எச்சிரிக்கை பாதாதைகளை காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை காட்சிப்படுத்தப்பட்ட 14 நாட்களுக்குள் பாவனையற்ற நிலையில் காணிகளை வைத்திருக்கும் காணி உரிமையாளர்கள் அவற்றை துப்பரவு செய்யவேண்டும்.

அவ்வாறு துப்பரவு செய்யாதவிடத்து குறித்த காணிகளை பிரதேச சபை முன்வந்து துப்பரவுப் பணியினை மேற்கொள்ளும் எனவும் இதன்பொருட்டு காணியினை உரிமை கோருபவர்களிடம் துப்பரவு செய்ததற்கான பணமும் அதனுடன் இணைந்து தண்டப்பணமும் அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.