மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை – 4 அழகிகள் கைது

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று (08) மாலை 3 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு ​மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணை ஒன்றின் படி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்கள் இன்று (09) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கல்கிஸ்ஸ ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.