பதுளையில் காட்டுக்குள்ளிருந்து 60 வயது பெண்ணின் சடலம் மீட்பு!

பதுளை தல்தென பரகஸ்தென்ன பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் காணப்பட்ட பெண்ணொருவரின் சடலத்தை தாம் மீட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 வயதான ஆர்.எம். ஹிம்மொனிக்கா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் ஒரு மாதமாக காணாமல் போயிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டிலேயே சடலம் காணப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.