ஐதேக தலைமை குறித்து வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பிலான எம்பிக்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (16) மாலை 5 மணிக்கு கூடிய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்சித் தலைவருக்கான வாக்கெடுப்பு குறித்து இன்று முடிவெடுத்து விட்டால் நாளைய (17) தினம் பதவி விலகப் போவதாக ஹரின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

இதேவேளை சற்றுமுன் குறித்த நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இருந்து கபீர் ஹாசிம் மற்றும் மாலிக் சமரவிக்ரம ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

மேலும் இந்த கலந்துரையாடல் எந்தவிதமான இணைக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.