திருகோணமலையில் சிசு கொலை – பெற்றோர் கைது

திருகோணமலை – தம்பலகாமம்
பகுதியில் இருந்து அதிக இரத்தப்போக்குடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் தொடர்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர்களின் வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் உரப்பையில் சுற்றி புதைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டதாக ழழ தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சிசுவின் 19 வயதான தாயும், 20 வயதான தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் இன்று கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சிசுவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ளது.