யாழில்,பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை கதறும் தாயார்!

யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுப்பட்டார் எனத் தெரிவித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை என தாய் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

அரியாலை பூம்புகாரை சேர்ந்த 26 வயதுடைய தனது மகனான இளைஞனையே காணவில்லையென தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரி பகுதியில் அண்மையில் திருட்டில் ஈடுபட்டார் எனத் தெரிவித்து எனது மகளை பொதுமக்கள் சிலர் பிடித்துள்ளனர்.பின்னர் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தநிலையில் பொலிஸாரிடம் தனது மகன் எங்கே?என தாயார் கேட்டுள்ளார்.

எனினும் பொலிஸார் தாம் அவரை கைது செய்யவில்லை என மறுத்துள்ளதாக தாயார் தெரிவித்தார்.

பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை பொலிஸார் அழைத்து சென்றதாக சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்று சில நாட்கள் கழிந்த போதிலும் தனது மகனை பொலிஸார் இன்று வரை வெளியிடவில்லை என குற்றம் சட்டியுள்ளதுடன் காணாமல் போயுள்ள தனது மகனை கண்டு பிடித்து தருமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.