யாழில் மக்களின் காணிகளை கையகப்படுத்த முனைந்த சிறிலங்கா அரசு!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்கதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனை போது அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுக்குச் சென்ற யாழ்ப்பாண நில அளவைத் திணைக்களத்தினர் காணிகளை அளவீடு செய்யாமல் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மேற்கொள்வவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காலையில் அங்கு சென்றிருந்தனர்.

ஆயினும் காணிகளை அளவிடுவதற்கு காடுகளின் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசுயல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அந்த பகுதியில் முஸ்லிம் குடியேற்றத்தை உருவாக்க காணி சுவீகரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சுமத்தினர். இந்த பகுதியில் முஸ்லிம் குடியேற்றம் உருவாக்க காணி சுவீகரிக்கப்படுவதாக முன்னர் வெளியான செய்திகளையும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

இதன் போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு யாழ் பிரதேச செயலாளர் சுதர்சன் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

ஆயினும் மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்து தெரிவித்த எதிர்ப்புக்களையடுத்து காணி அளவீடுகள் மேற்கொள்ளாமல் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதன் போது கருத்து வெளியிட்ட பிரதேச செயலர், பொது மக்களின் எதிப்புக்களால் இந்த அளவீடுகளை நிறுத்துவதற்கும், இது சம்மந்தமாக ஆராய்ந்து தொடர்ந்து அளவீட்டு பணிகளை முன்னெடுக்கப்பட்ட போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

https://www.facebook.com/watch/?v=199786551076754