யாழ்.வறணி பகுதியில் குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி பலி!

யாழ்.வறணி பகுதியில் உள்ள சிறிய குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இன்று மதியம் குறித்த நபா் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென நீாில் மூழ்கி காணாமல்போயுள்ளாா்.

இதனை அவதானித்த அங்கிருந்த சிலா் உடனடியாக மேலும் சில பொதுமக்களை அங்கு கூட்டியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .