யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்துள்ள பேரினவாத பௌத்த விகாரை!

வட தமிழீழம் , கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான(பாளி மொழி ) கலசம் வைக்கும் நிகழ்வு இன்று (27) காலை 6.15 மணியளவில் இடம்பெற்றது

அத்தோடு குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் நான்கு தலங்கள் அமைப்பதற்கு தலா ஒரு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டதாகவும் ,.ஆனால் ஏனைய வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் செ.தியாகராஜா யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வணக்கஸ்தலத்தினை அமைத்து கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் வணங்கக்கூடிய வகையில் பொதுவான கட்டடத்தினை அமைப்பதற்கான திட்டம் கைவசம் உள்ளதாகவும் பல்கலைக்கழக சமூகம் சம்மதம் தெரிவிக்குமிடத்து பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.