யாழ், மட்டு விமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்த திட்டம்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு விமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் இலங்கை நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைய விமான நிலையத்திற்கு வரும் மற்றும் வெளியேறும் பயணிகளின் வசதிக்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கட்டுநாயக்க, மத்தள, இரத்மலானை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் ஜப்பான் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட உள்ளது. மத்தள சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான விசேட பேச்சுவார்த்தையொன்று அடுத்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியை சுத்தம் செய்து ஒளியூட்ட இராணுவத்தினரின் ஒத்துழைப்புப் பெறப்படுமென்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் இலங்கை நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்தார்