கிளிநொச்சியில் கட்டுத்துவக்கு வெடித்து இருவர் படுகாயம்!

கட்டுத்துவக்கு வெடித்ததில் இரு சகோதரர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கால்நடைகளை அழைத்துச் சென்றபோது, வேட்டையாடுவதற்காகப் பொறி வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இரு சகோதர்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.