கல்குடா கல்மடு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்!

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் விநாயகபுரம் 6ம் குறுக்கை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயன கந்தன் தெய்வானை (லட்சுமி) (வயது – 68) என்பவரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கணவனை இழந்த நிலையில் தனது மகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இம் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தில் கல்குடா பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அவரின் சடலம் விசாரணைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.