தமிழர்களை அடக்கிய அரசு இன்று முஸ்லிம்களை அடக்க முனைகிறது!

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை பல சக்திகள் முன்னிறுத்தி வருகின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் குற்றஞ்சாட்டினார்.

நிந்தவூர் பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15) முற்பகல் இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

முஸ்லிம் சமூகத்தின் மீது அரசு கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது. ஊடகங்களை திறந்தால் எமது சமூகத்தின் தலைவர்களை திட்டமிட்டு அவர்களது குரல்வளையை நசுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை நாங்கள் காண்கின்றோம்.

தமிழ் சமூகத்தின் மீது 30 வருட யுத்ததை மேற்கொண்டு அவர்களை ஒருவாறு கையாண்டு அடக்குமுறைக்குள் கொண்டு வந்த பின்னர் முஸ்லிம் சமூகம் கண்டு வந்த பொருளாதார கல்வி வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பேரினவாத சக்திகள் திட்டமிட்டு பல்வேறு விதமான அடக்குமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

இந்தவகையில் தான் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி வருகின்றது என தெரிவித்தார்.