கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய கணவன் மற்றும் மனைவி இருவரும் கைது!

இன்று அதிகாலை வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய கணவன் மற்றும் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயிலிருந்து வந்திறங்கிய கொட்டாஞ்சேனையை சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவரும் இந்திய பிரஜையான அவரது (வயது 42) மனைவியுமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

சட்ட விரோதமான முறையில் இவர்கள் கொண்டுவந்த 24,20,000 (24 மில்லியன்) மதிப்புள்ள 48,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 242 சிகரெட் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் தலா ரூபா.200,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.