பணத்தை விட நாடு தான் முக்கியம்… ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்!

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் தன்னுடைய நாட்டுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பணம் கொட்டடும் தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவர்.

வெளிநாட்டு வீரர்களும் கோடிக் கணக்கில் ஐபிஎல் அணியினரால் வாங்கப்படுவர்.

Advertisement

அப்படி இந்த முறை டெல்லி அணி, ஏலத்தில், ,மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயர், அவுஸ்திரேலிய வீரர்களான மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் அலெக்ஸ் கேரி, இங்கிலாந்தின் ஜேசன் ராய் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களை எடுத்தது.

வேகப்பந்து வீச்சு மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸை டெல்லி அணி எடுத்தது.

ஆனால், கிறிஸ் வோக்ஸ் ஐபிஎல்-லில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது முடிவை டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஆடவுள்ளது. அந்த தொடருக்காக புத்துணர்ச்சியுடனும் உடற் தகுதியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ் வோக்ஸ் ஐபிஎல்-லில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால் அதிக பணம் புழங்கும் ஐபிஎல் தொடரில் ஆடுவதற்குத்தான் அனைத்து வீரர்களும் விரும்பும் நிலையில், தனது தேசிய அணிக்கு ஆடுவதுதான் முக்கியம் என்று ஐபிஎல்-லில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகியிருப்பது, பணத்தை விட நாடே முக்கிய என்பதை உணர்த்துவதாக இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் அவரை புகழ்ந்து வருகின்றனர்.