ஐபிஎல் டிக்கெட் விற்பனைக்கு தடை!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் டிக்கெட் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

13 ஆவது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 29 ஆம் திகதி தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் தலைமையிலான மும்பை அணியும் மோதவுள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆனால், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா அரசு இந்த டிக்கெட் விற்பனைக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

அதன்படி இன்று தொடங்கிய ஐபிஎல் டிக்கெட் விற்பனை உடனடியாக நிறுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக கூட்டம் கூடுவதை நிறுத்த மகாராஷ்டிரா அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.