தெல்லிப்பளையில் கொரோனா தொற்று நோயாளி? யாழ் போதனாவைத்தியாலைக்கு மாற்றம்!

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொரோனா தொற்றுள்ளவர் என சந்தேகப்படும் ஒருவர் தற்போது யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றிற்குள்ளான ஒருவரின் பொறுப்பற்ற தன்மை காரணமாக வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் சுய தனிமைக்குள்ளாகியுள்ளனர்.

இது தவிர, மேலும் பல நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

ராகம பொது வைத்தியசாலையில் இந்த சம்பவம் நடந்தது.

சில தினங்களின் முன்னர் வயதான ஒருவர் இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உள்ளூர் வாசியென தன்னை குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர், வைத்தியசாலையின் பொது விடுதியில் (15ம் வார்ட்) அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.

அவரது இரத்த மாதிரி, பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில், அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டதுடன், ஐடிஎச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், இத்தாலியிலிருந்து நாடு திரும்பியதாக அந்த முதியவர் தெரிவித்தார்.

அவரது பொறுப்பற்ற தன்மையால் வைத்தியசாலையின் பணியாளர்கள் 15 பேர் சுயதனிமைக்குள்ளாகியுள்ளதாக ராகம பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொது விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, விடுதியில் தங்கியிருந்த ஏனைய நோயாளிகளின் கட்டில்களிற்கு சென்று அவர் உரையாடியதாகவும், இத்தாலியிலிருந்து வந்ததை அவர் மறைத்ததால், வைத்தியசாலை பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். அவர் வைத்தியசாலையில் 2 நாட்கள் தங்கியிருந்தார்.

அவர் இத்தாலியில் இருந்து வந்தது தெரிந்திருந்தால், ஆரம்பத்திலேயே அவரை தனிமைப்படுத்தியிருப்போம் என அவர் தெரிவித்தார்.

அவருடன் நெருக்கமாக உரையாடிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

கர்ப்பிணியான பெண் வைத்தியர் உள்ளிட்ட இரண்டு வைத்தியர்களும், வைத்தியசாலை பணியாளர்களுமாக 15 பேர் சுயதனிமைக்குள்ளாகியுள்ளனர்.