புங்குடுதீவு பெருக்குமரம்” அழகுபடுத்தப்பட்டு, மக்கள் பார்வைக்கு கையளிக்கும் நிகழ்வு

யாழ்ப்பாண வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் நிகழ்வு.. இன்று 20.03.2020 வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு “புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவர்” திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு.இளங்கோவன், அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் பரமு புஸ்பரெட்ணம் (யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர்), திரு. கா.குகபாலன் (பல்கலைக்கழக முன்னாள் புவியியற்துறை பேராசியர்), திருமதி.அமிர்தலிங்கம் சச்சிதானந்ததேவி (புங். கல்லடி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா) ஆகியோருடன், தொல்பொருள்திணைக்களம் யாழ்.கோட்டை புனர்நிர்மாணப் பொறுப்பாளர் திரு.பாலசுப்ரமணியம் கபிலன், வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் திரு க.வசந்தகுமார், திரு.க.நாவலன், திரு செந்தூரன் ஆகியோருடன், தாயகம் சமூக சேவை அமைப்பின் தலைவி திருமதி த.சுலோசனாம்பிகை, யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் திரு மா.இளம்பிறையன், புங்குடுதீவு நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முன்னைநாள் தலைவர் திரு.சு.கருணாகரன், புங்குடுதீவு ஶ்ரீகணேச மகா வித்தியாலய அதிபர் திரு.s.கமலவேந்தன், பசுமைப் புரட்சிக் குழுமத் தலைவர் திரு.குமாரதாஸ், ஓய்வுநிலை கிராம அலுவலர் திரு.கு.சந்திரா ஆகியோருடன் புங்குடுதீவு சிறார்கள், பொதுமக்கள் என பலரும் பங்குபற்றிய இந்நிகழ்வில்..,

ஆசியுரையினை புங்குடுதீவு பாணாவிடை சிவன் தேவஸ்த்தான பிரதம சிவாச்சாரியார் புங்குடுதீவு ரூபன் சர்மா அவர்களும், வரவேற்புரையினை செல்வி எ.செல்வவதனா அவர்களும், வரவேற்பு நடனத்தை புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலைய கலாமன்ற மாணவி செல்வி தினேஸ் சந்தியா வழங்கினார்.

தொடர்ந்து தலைமையுரை, சிறப்பு விருந்தினர்கள் உரை, பிரதம விருந்தினர் உரை என்பவற்றுடன் கட்டிடக் கலைஞர் திரு வனோஜன் குழுவினர் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இறுப்பிட்டி சனசமூக நிலைய செயலாளர் திரு.பிள்ளைநாயகம் சதீஷ் அவர்களின் தொகுப்புரை, நன்றியுரையுடன் இனிதே நிறைவுக்கு வந்தது வரலாற்று சிறப்புமிக்க பெருக்குமரச்சூழல் பொதுமக்கள் பாவனைக்காக சம்பிரதாய முறைப்படி கையளிக்கும் நிகழ்வு.

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” முழுமையான நிதி ஏற்பாட்டில், யாழ்.தொல்லியல் திணைக்கழகத்தின் ஆலோசனையில், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு.இளங்கோவன் அவர்களின் வழிகாட்டலிலும், முன்னாள் அதிபர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் மற்றும் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையிலும் “வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும், இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களையும் சுற்றுலாப் பயணிகளாக புங்குடுதீவுக்கு ஈர்க்கும் வகையில்” “பெருக்குமரத்தை சுற்றி கட்டுக்கட்டி புல்கள் பதிக்கப்பட்டதுடன், நடைபாதைகள், கல்லிலான இருக்கைகள், ஆண்,பெண்களுக்கென மலசல கூடங்கள், கிணறு, தண்ணீர் தொட்டி, ஆகியவற்றுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்” போன்றவற்றையும் அமைத்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.

முட்புதர்கள் அடங்கிய பெரும் பற்றைக்காடாக இருந்த இப்பிரதேசத்தை குறிப்பிட்ட காலத்துக்குள், மேற்படி “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள கடற்கரைப் பகுதியையும்” அழகுற நிர்மாணிக்க அயராது பாடுபட்டதுடன், அதுக்குரிய இன்றைய நிகழ்வையும் நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியிலும் மிகச்சிறப்பாக நடத்த முழுமையாக பாடுபட்ட “புங்குடுதீவு மண்ணின் மைந்தர்களான” திரு.இ.இளங்கோவன், திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், திரு.பி.சதீஷ், திரு.திருமதி.அமிர்தலிங்கம் சச்சிதானந்ததேவி, திரு.வனோஜனுடன் இணைந்த கட்டிடக் கலைஞர்களுக்கும், அனைத்தையும் இரவுபகலாக நேரடியாக கவனித்து சிறப்புற நிறைவேற்றிய எமது ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கும் “எமது ஒன்றிய நிர்வாகசபை” சார்பாகவும், சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்கள் சார்பாக எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

Previous articleஊரடங்கு சட்டத்தினை மதித்து நம் நாட்டு மக்களை பாதுகாக்க அனைவரும் தங்களுடைய வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சட்டத்தரணி ஹபீப் றிபான்
Next articleசெல்லடித்து திரித்தவர் இன்று வரம் வேண்டி அம்மாளின் காலடியில் சரண்!