சங்ககார தனது வீட்டில் சுயாதீனமாக தனிமைப்படுத்திக் கொண்டார்!

Former Sri Lankan cricket captain Kumar Sangakkara gives some TV commentary during the one day international (ODI) Asia Cup cricket match between Bangladesh and Sri Lanka at the Dubai International Cricket Stadium in Dubai on September 15, 2018. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார சங்ககார தனது வீட்டில் சுயாதீனமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

வார இறுதியில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பியதன் காரணமாக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இலங்கை திரும்பியதும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று பதிவு செய்துக்கொண்ட அவர், பின்னர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக சங்ககார கூறியுள்ளார்.

தனது குடும்பத்தினருடனும் தான் நெருங்கி செயற்படுவதில்லை எனவும் அது கடினமானது என்றாலும் நாட்டுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் இதனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.