ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது!

ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் ஓகஸ்ட் வரை சர்வதேச ஒலம்பிக் போட்டிகள் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டோம் என கனடாவும், அவுஸ்திரேலியாவும் அறிவித்திருந்தன.

வேறும் பல நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தயக்கம் காட்டுவது, மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சபை அறிவித்துள்ளது.

Advertisement