யாழில் ஊடரங்குசட்டவேளையிலும் திறந்திருக்கும் மதுபானசாலை!

கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் நாடுமுழுவது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மதுபானசாலைகள் திறக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டபாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

நேற்று யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த சூழலில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு அங்கு மதுபான வியாபாரம் நடைபெற்று உள்ளது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘ரவி றெஸ்ரோறன்ட்‘ என்ற பெயரில் இயங்கும் குறித்த சாராயக்கடை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்திலும் விற்பனையில் ஈடுபடுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் இவ்வாறு பொறுப்பற்று நடக்கும் ஒரு சிலரால் யாழ் மாவட்டத்தை வைரஸ் பிரச்சனையிலிருந்து யாராலும் பாதுகாக்க முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை என சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.