யாழ் நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

அச்சுவேலியில் உள்ள அரச நெசவுசாலையில் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரியாலையில் நடைபெற்ற ஆராதனையில் கலந்துகொண்டதற்காக குறித்த நபர்கள் கடந்த 6 நாள்களாக பொலிஸ் காவலுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மதக்குழுவினர் அரசுக்கு சொந்தமான குறித்த கட்டிடத்தை ஆக்கிரமித்தமைக்கு எதிராக பிரதேச மக்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

Advertisement

மத வழிபாடு என்ற பெயரில் அங்கு இடம்பெறும் களியாட்டங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பலால் தாங்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் இந்த நெசவுசாலையை மீளவும் கைத்தொழில் திணைக்களம் பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தபோதும் , அதிகாரிகள் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதேவேளை குறித்த நடவடிக்கைக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.