நாங்கள் இருப்பதை கனடா மறந்துவிட்டதா – விடுமுறைக்காக இந்தியா வந்த கனேடியர்கள் கதறல்

விடுமுறைக்காக இந்தியா வந்த கனேடிய குடிமக்கள் பலர், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்கள் இருப்பதை கனடா மறக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவிரும்புகிறோம் என்று கூறியுள்ளார்கள்.

கோவாவில் இருக்கும் Lavigne என்பவர், தானும் தனது மகளும் கனேடிய தூதரகத்தை தொடர்புகொள்ள முயன்றும், கனடாவின் அவசர உதவி மையத்திற்கு மின்னஞ்சல்கள் அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார்.

ஒரு வழியாக ஒரு அலுவலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அவரோ, ட்வீட்களையும் செய்திகளையும் கவனித்து அதன்படி நடந்துகொள்ளுமாறு கூறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் Lavigne.

நாங்கள் இந்தியாவில் இருப்பதை கனடா மறக்கவில்லை, எங்களை இன்னமும் கனடாவில் யாரோ தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம் என்கிறார் அவர்.

© James Mulleder/CBC
Cloverdaleஐச் சேர்ந்த Ravi Gill என்பவரின் தந்தையான Hardin Singh Gill இந்தியாவின் பஞ்சாபுக்கு சென்றிருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், தனது தந்தை எப்போது திரும்புவார் என பதற்றத்துடன் காத்திருக்கிறார் அவர்.

மொராக்கோவிலிருந்தும், பெருவிலிருந்தும் விமானங்கள் கனேடியர்களை கனடாவுக்கு திரும்ப அழைத்து வருவதைக் காண்கிறோம்.

அந்த நாடுகளில் இருக்கும் கனேடியர்களைவிட இந்தியாவிலிருக்கும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகம் தான் என்று கூறும் Ravi Gill, இந்தியாவுக்கு 500 விமானங்களை அனுப்பி கனேடியர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வருவது கடினம்தான், என்றாலும் கனடா ஏதாவது நடவடிக்கை எடுப்பதைக் காண விரும்புகிறோம் என்கிறார்.

சர்ரே நியூட்டன் லிபரல் எம்.பியான Sukh Dhaliwalஇன் 80 வயதான தாயார் உட்பட, இந்தியா வந்த 15,000க்கும் மேற்பட்ட கனேடிய குடிமக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்தியா வந்த கனேடியர்கள், மீண்டும் கனடா திரும்ப வழியின்றி தவிக்கிறார்கள்.

இதற்கிடையில், கனடா அரசு, கனடா வெளியுறவு அமைச்சரான François-Philippe இந்திய அரசுடன் தொடர்பிலிருப்பதாகவும், கனேடியர்களை கனடாவுக்கு கொண்டுவர முயற்சி செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.