கொரோனாவை ஆராய்ச்சி செய்த தமிழ் பெண் நிபுணர் என்ன சொல்லுகிறார்!

வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் COVID-19 தொற்று உலகின் இயக்கத்தையே முடக்கி வருகிறது. ஆனால் இது குறித்த வதந்திகளும் புரளிகளும் கட்டுக்கடங்காமல் சமூகவலைகளில் பரவி வருகின்றன.

உண்மை எது, வதந்தி எது, கற்பனையில் எழுதப்பட்ட கட்டுக்கதை எது என்று பிரித்தறிவதற்காக, கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வுகளை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் Dr. பவித்ரா வெங்கடகோபாலன் அவர்களைத் தொடர்பு கொண்டு அவரது ஆராய்ச்சி, இந்த வைரஸ் உருவான விதம், அது எவ்வாறு பரவுகிறது, இதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், இதனைத் தடுக்க எப்படியான உணவுகளை உண்ண வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடை காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

முனைவர். பவித்ரா வெங்கடகோபாலன் தற்போது சென்னையில் ஒரு மருத்துவ கண்டறியும் மையத்தையும் பெங்களூருவில் ஒரு ஆராய்ச்சி ஆய்வகத்தையும் நிறுவி இயக்கி வருகிறார்.

Advertisement