சுவிஸில் கொரோனாவால் பலியான முதல் தமிழர்!

உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம்தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய திரு. சதாசிவம் லோகநாதன் (பால்குடி ) (60) புங் தீவு-4 கொரோனாவினால் சுவிசில் சாவடைந்தார்.என்பவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சுவிஸ் செங்காளன் ஜோனா என்னும் பகுதியில் ஒரு வெதுப்பகத்திற்கு அதாவது பேக்கரிக்கு மேலுள்ள குடியிருப்புத் தொகுதி ஒன்றில் 5 அறைகளில் ஒரு அறையில் தங்கியிருந்த மேற்குறித்த நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிச் நகருக்கு சென்று வந்ததுள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்பு கொண்ட போது வைத்தியர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு தெரிவித்திருக்கின்றனர்.

அதனையடுத்து தனிமைப் படுத்தப்பட்டிருந்த அவர் இன்று மாலை ஆகியும் அவருடைய அறையில் எந்தவொரு சலனமுமின்றி இருந்ததனால் பக்கத்து அறையில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸாரும், வைத்தியப் பிரிவினரும் அவர் இறந்து விட்டதாக அறிவித்து அவரது சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த நபரான லோகநாதன் அவர்களின் குடும்பத்தினர் புங்குடுதீவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரின் சகோதரி இருவர், சகோதரர் ஒருவர் பேர்ண் பகுதியிலும், மருமகள் உறவு முறையில் உள்ள ஒருவர் பிரான்ஸ் நாட்டிலும் வசித்து வருகின்றனர்.

லோகநாதன் நீரிழிவு நோயாளி எனவும் அவர் ஒரு சுவிஸ் உணவகத்தில் வேலை செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு “கொரோனா வைரஸ்” தாக்குதலுக்கு உள்ளாகிய அறிகுறி தென்பட்ட போதிலும், சுவிஸ் அரச அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தாமல், இருவாரத்துக்கு அவரது அறையிலேயே தனித்து இருக்கும்படி தெரிவித்து உள்ளனரென அதே கட்டிடத்தில் உள்ள அவரது நண்பர்கள் குறை கூறுகின்றனர்.

மேலும் அக்குடியிருப்புத் தொகுதியில் அறையில் தங்கியிருக்கும் மற்றொருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரும் ஒரு யாழ்ப்பாணத்து தமிழர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

Swiss Rapperswil இல் எனும் இடத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் . இவரது மரணம் தொர்பாக சுவிஸ்லாந்தில் உள்ள ஒருவர் தனது முகப்புத்தகத்தில் தந்த தகவல்களை இங்கு தந்துள்ளோம்….

இவரது மனைவியும் பிள்ளையும் இலங்கை வவுனியாவில் வசித்துவருகின்றனர். ஒரு மகன் பிரான்ஸ் நாட்டில் வசிப்பதாகவும் தெரிய வருகின்றது . இவர்சக்கரை நோயாளியாகவும் இருந்த காரணத்தால் இலகுவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன . நான்கு நாட்களுக்கு முன் இத்தொற்றின் வீரியம் அறியாமல் மருத்துவரிடம் சென்ற வேளை அவர் வீட்டில் தனிமையில் இருந்து மருந்துகளை எடுக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார் . 3 நாட்களாக வெளியில் இருந்தே இவருக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் 4 வது நாள் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால் காவல்துறையின் உதவியோடு கதவு உடைக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது !

இது செய்தி மட்டுமல்ல தனிமையில் இருப்போர் மற்றவர்களோடு தொடர்பில் இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது !
அன்னாரின்ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை 🙏

உலகளாவிய ரீதியில் நானறிந்த வகையில் கொரோனாவுக்குப் பலியான முதல் தமிழராகவும் , முதல் புங்குடுதீவைச்சேர்ந்த நபராகவும் இருக்கிறார் . இவரது உறவினர் விபரம் தேவைகருதி அறிந்தபோதும் தெரிவிக்க விரும்பவில்லை ! இவரது புகைப்படத்தை வைத்தே புங்குடுதீவு – 4ம் வட்டாரத்தினரிடம் விசாரித்தால் அறியலாம் .

எனக்கு அவரது சகோதரர், சகோதரிகள் , மற்றும் மைத்துனர்கள் , மைத்துனி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்தான் அவர்களுக்கு இந்த நேரம் ஆறாத்துயரை தொலைபேசி மூலம்மட்டும்தான் இரங்கலைத் தெரிவிக்க முடியும் ..!
அன்னாரின் குடும்ப உறவுகளுக்கு எனதுஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்🙏