யாழில் இப்போதைக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படமாட்டாது!

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே குறித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவிப்பு வரும்வரை தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.