தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 163 பேர் இன்று வீடுகளுக்கு திரும்ப தயார்!

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 163 பேர் இன்று தத்தமது வீடுகளுக்கு திரும்புவதற்கு தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கந்தகாடு மற்றும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்களே இவ்வாறு இன்று வீடு திரும்புகின்றனர்.

இதனடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 46 தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் 3 ஆயிரத்து 86 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கந்தகாடு தனிமைபடுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 144 பேரும்; புனானை தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 57 பேரும் நேற்று வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.