கொரோனா ஒரு கடவுள் வரமா? நன்மையா?தீமையா?

கொரோனா தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வந்த பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்… நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்….

1. தற்கொலை மரணங்கள் பதிவாகவில்லை
2. புகையிரதத்தில் அடிபட்டு யாரும் சாகவில்லை
3. வீதி விபத்து மரணங்கள் இல்லை
4. வாள் வெட்டுக்கள் இல்லை
5. கஞ்சா அபின் கடத்தல்கள் ஒன்றிரண்டுதான்
6. பெண்கள் வன்கொடுமைகள் பதிவாகவில்லை
7. எல்லோரும் முகமூடி போட்டிருப்பதால் முக மூடி திருட்டுகள் பதிவாகவில்லை.
8. ஊர் சண்டித்தனங்கள் ஓய்ந்திருக்கின்றன.
9. வீட்டு உறவுகள் மேம்பட்டிருக்கின்றன.
10. ஒலி பெருக்கி இரைச்சல் வாகன இரைச்சல் வாகன புகை ஓய்ந்துவிட்டது.
11. மது புகை பான்பராக் கஞ்சா பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
12. அப்பா அம்மாவுடன் குழந்தைகள் விளையாடுகின்றார்கள்.
13. எல்லோரும் உணவை தாங்களே சமைத்துண்ணுகிறார்கள்.
14. உயிர் பயம் காரணமாக குளித்து முழுகி கை கழுவி சுத்தமாக இருக்கிறார்கள்.
15. தேவையில்லா நொட்டு நொறுக்குகள் ஸ்நாக்ஸ் ஜஸ்கிறீம் பாவனை குறைந்துள்ளது.
16. அரசியல்வியாதிகளின் தேர்தல்கால புலூடாக்களின்றி அமைதி காணப்படுகின்றது.
17. பாரம்பரிய உணவின்பால் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
18. உழவர் சந்தைகள் என பாரம்பரியங்கள் அமுலாகின்றன.
19. வங்கி கடன் தவணை கிரடிட் காட் லீசிங்கிலிருந்து தற்காலிக நிவாரணம்
20. மொத்தத்தில் நாடே அமைதியாய் இருக்கு

Advertisement