ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன?

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

சுறுசுறுப்பானவர்கள்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் உணர்திறன் மற்றும் விவேகமானவர்கள். அவர்களைச் சுற்றி என்ன விஷயங்கள் இருக்க வேண்டுமென்பதில் எப்பொழுதும் கவனமாக இருப்பார்கள்.

இதயம் சொல்வதை கேட்டு நடக்கும் இவர்கள் மூளையை உடன் அழைத்த செல்கிறார்கள்.

Advertisement

இவர்களின் சுறுசுறுப்பு இவர்கள் இருக்கும் இடத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இவர்களின் அறிவுரைக்காக அனைவரும் காத்திருப்பார்கள்.

தோல்வியை நினைத்து அஞ்சமாட்டார்கள்
முடிவு என்னவாக இருக்குமென்று சிந்திக்காமல் இவர்கள் தங்களின் சிறந்ததை வழங்குவார்கள். அவர்கள் கவலைப்படுவது எல்லாம் அவர்களின் திறன்களுக்கு ஏற்றவாறு வேலைகளைச் செய்வதாகும்.

தோல்வி என்பது இவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. தோல்வியின் தாக்கத்தில் இருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

தைரியமானவர்கள்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாகவும், சாகசக்காரர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் ஆளுமை மிகவும் வலிமையானதாகும்.

இவர்களின் தைரியம்தான் இவர்களுக்கு வாழ்க்கையில் சிறந்த வாய்ப்புகளை பெற்றுத்தரும். மேலும் இவர்கள் தங்களின் அணுகுமுறை குறித்து வெளிப்படையாக பேசுபவர்களாக இருப்பார்கள்.

பிரச்சினைகள் மற்றும் தடைகளைச் சமாளிக்க அவர்கள் பயப்படுவதில்லை.

பலர் ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து விலகி இருக்கும்போது, இவர்கள் எப்போதுமே அதனை சமாளிக்க தயாராக இருக்கிறார்கள்.

ஆர்வமிக்கவர்கள்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களுக்கு உணவு, விஞ்ஞானம், புத்தகங்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும். எந்த வேலை செய்தாலும் அதனை ரசித்து செய்வார்கள்.

தொடர்ந்து முயற்சிப்பது இவர்களுக்கு கனவு வேலையை அடைய உதவுகிறது, வெற்றிகரமனாக இருப்பதும் அல்லது பணம் சம்பாரிப்பதும் இவர்களுக்கு எளிதானதாகும், ஆனால் இவர்களின் இலட்சியம் பணம் அல்ல. சாகசம் நிறைந்த வேலைகளை செய்வதில்தான் இவர்களின் ஆர்வம் இருக்கும்.

நட்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்
உண்மையில் இவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். அவர்கள் நட்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள், அதை கவனித்துக்கொள்கிறார்கள்.

விசுவாசமான நண்பர்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒரு சொத்தாகும். அவர்கள் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்தாலும், அனைவரிடமும் தனித்துவமான இணக்கத்தை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் உண்மையிலேயே போற்றத்தக்கவர்கள், இவர்களின் நண்பர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இவர்களுக்கென ஒரு சிறப்பு இடம் இருக்கும்.

ரொமான்டிக்கானவர்கள்
காதல் என்று வரும்போது, ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள். காதல் விஷயத்தில் இவர்களை யாராலும் வெல்லமுடியாது. இவர்கள் இருக்கும் உறவில் எப்பொழுதும் மகிழ்ச்சியான காலகட்டம் அதிகமாக இருக்கும்.

கவர்ச்சியும், பாசமும் நிறைந்த இவர்கள் தங்கள் துணைக்கு எப்போதும் ஊக்கமளிப்பார்கள். காதலில் ஒருவேளை ஏமாற நேர்ந்தால் சந்நியாசம் செல்ல முடிவெடுத்து விடுவார்கள்.

சாகசத்தை விரும்புபவர்கள்
இவர்கள் அதனை வெளிக்காட்டாமல் இருந்தாலும் போரான மற்றும் மந்தமான வாழ்க்கையை இவர்கள் வெறுக்கிறார்கள்.

தங்களின் காதல் வாழ்க்கை கூட சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அட்ரினலின் உற்பத்தி செய்யும் வேலையை மட்டுமே இவர்கள் எப்போதும் செய்ய விரும்புகிறார்கள்.

இவர்களின் துணை இவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கும்படி செய்வார்கள்.

பொறுமையற்றவர்கள்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் சில நேரங்களில் மிகவும் பொறுமையற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் உண்மையில் முடிவுகளுக்காக காத்திருக்க மாட்டார்கள் மற்றும் சூழ்நிலைகளில் இருந்து விரைவில் வெளியேற முயற்சிப்பார்கள்.

அவர்களின் பொறுமையின்மை காரணமாக அவற்றைக் கையாள்வது அவர்களுக்கு சிரமமாக இருக்கலாம். பொறுமையின்மைதான் அவர்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மூலமாகும்.

அவர்களுக்கு பதில்களைக் கொடுக்க வாழ்க்கையை கட்டாயப்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

அழிவை ஏற்படுத்தக்கூடியவர்கள்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் ஆளும் கிரகத்தின் காரணமாக இயற்கையாகவே மிகவும் அழிவை ஏற்படுத்தும். அவர்கள் குறுகிய மனநிலையுடையவர்கள், சில சமயங்களில் அவற்றைச் சமாளிப்பது மிகவும் கடினம்.

இதன் காரணமாக, மக்கள் அவர்களை முரட்டுத்தனமாவர்களாகவும், சுயநலமானவர்களாகவும், ஆக்ரோஷமானவர்களாகவும் கருதுகின்றனர்.

பெரும்பாலான சமயங்களில் இவர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சூழ்நிலையை சமாளிப்பார்கள்.

அதீத உற்சாகம்
பொதுவா உற்சாகம் என்பது ஒருவரின் நல்ல குணங்களில் ஒன்றாகும். ஆனால் இவர்களின் அதீத உற்சாகம்தான் இவர்களின் எதிர்மறை பண்பாகும்.

இவர்களின் அதீத உற்சாகம் மக்களுக்கு இவர்களின் மீது விரோத போக்கை ஏற்படுத்தும்.

ஒருபோதும் இவர்கள் அதனை விடமாட்டார்கள்.இவர்கள் எப்போதும் அனைவரின் கவனத்தின் மையமாக இருக்க விரும்புவார்கள், அதற்காக இவர்கள் செய்யும் சில விஷயங்கள் இவர்களுக்கு அவமானங்களை ஏற்படுத்தலாம்.